எல்லை தாண்டி மீன்பிடித்த 13 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் கைது: புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். 

ஜுலை 11, 2024 - 10:52
ஜுலை 11, 2024 - 10:53
எல்லை தாண்டி மீன்பிடித்த 13 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். 

அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள 13 மீனவர்களையும் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!