நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.