நான் காதலிக்கிறேனா.. திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதிவ்யா!
அட்லீ தயாரித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டில் பட வாய்ப்பு இல்லாததால், சினிமாவில் இவர் தலைகாட்டவே இல்லை.

நடிகை ஸ்ரீ திவ்யா திருமணம் குறித்து வரும் வதந்திக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் ஸ்ரீ திவ்யா. இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
2010ஆம் ஆண்டு வெளியான மனசாரா எனும் தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
அடுத்தடுத்த படத்தில்: இதையடுத்து, அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி, ராணா டகுபதிக்கு ஜோடியாக பெங்களூரு நாட்கள், ஜிவி பிரகாஷ் உடன் பென்சில், விஷாலுக்கு ஜோடியாக மருது படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்திருந்தார்.
விஷ்ணு விஷாலுடன் மாவீரன் கிட்டு என ஒரே ஆண்டில் அரை டஜன் படங்களில் நடித்து செம்ம பிசியான கதாநாயகியாக வலம் வந்தார் ஸ்ரீதிவ்யா.
அதன் பின் அட்லீ தயாரித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டில் பட வாய்ப்பு இல்லாததால், சினிமாவில் இவர் தலைகாட்டவே இல்லை.
தற்போது, இவர் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ரெய்டு படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அரசியல், ரவுடிசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையொட்டி வரும் 10ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோஷன் நிகழ்ச்சியில் கலந்து பேசினார்.
மேலும், தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. சில படங்களின் கதை எனக்கு சரியில்லை என்று நானே நிராகரித்திருக்கிறேன், நல்ல படங்களும் அமையவில்லை. ஆனால் நான் மற்ற மொழிகளில் நடித்து வருவதால் தமிழில் இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்றார்.