இறக்குமதி முட்டை தொடர்பில் விசேட அறிவித்தல்
குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இலங்கை அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி பலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து நுகர்வோருக்கு வழங்கப்படும் போது அவற்றை மூன்று நாட்களுக்குள் நுகர்ந்து விட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை வகைகள் கடந்த 25ஆம் திகதி முதல் சதொச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
சதொச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் ஒரு முட்டையின் விலை 35 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.