114 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட எவரேனும் தாம் பணியாற்றும் பாடசாலைக்கு சமூகமளிக்க சிரமம் ஏற்படும் நிலையில், அருகில் உள்ள பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பத்கொட பகுதியில் மண்சரிவு காரணமாக குறித்த பாதையூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பாடசாலைகளுக்கு குறித்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.