பாடசாலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாளை (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் அறிவித்தல் வெளியாகியுள்ளது.
விடுமுறை வழங்குவதற்கான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.