சில பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை
மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோன்று இயங்கும் என கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.

சீரற்ற வானிலை மற்றும் வெள்ள நிலைமை காரணமாக, கல்முனை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்றும் (11) நாளையும் (12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.
மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோன்று இயங்கும் என கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.
இந்த இரு விடுமுறை தினங்களுக்குமான பதில் பாடசாலை நடவடிக்கைகள், இம்மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 27ஆம் திகதி சனிக்கிழமையும் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழைமை (15) அரச விடுமுறை தினம் ஆகும்.
(நூருல் ஹுதா உமர்)