அடுத்த மூன்று மாதங்களில் கடுமையான மருந்து தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர்
எதிர்வரும் மூன்று மாதங்களில் நாட்டில் பல மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களில் நாட்டில் பல மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், கடன் பத்திரங்களை திறப்பதில் தாமதம் ஏற்படுவதால் மருந்துகள் வருவதில் தாமதம் ஏற்படும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாதிப்பை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.