அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை
அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சக ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உணவு வாங்குவதற்காக அச்சகத்திலிருந்து வெளியேறிய ஊழியர், அச்சகத்துக்கு திரும்பியபோது பாதுகாப்புக் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரி கூர்மையான ஆயுதத்தால் ஊழியரைத் தாக்க முயற்சி செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை அங்கு இருந்த ஒருவர் தனது அலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனர்.