பாடசாலைகள் நாளையும் மூடப்படுமா? வெளியான தகவல்

போராட்டத்தினால் நாட்டில் இன்று அதிகளவான அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளையும்  பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஜுன் 26, 2024 - 20:31
பாடசாலைகள் நாளையும் மூடப்படுமா? வெளியான தகவல்

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (27) ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை, இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

போராட்டத்தினால் நாட்டில் இன்று அதிகளவான அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளையும்  பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், சுகவீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர் சங்கத்தினர் இன்று பிற்பகல் கொழும்பில் பாரிய ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், அதிபர் - ஆசிரியர்களின் போராட்டத்தின் போது கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, ஜனாதிபதி செயகம், மத்திய வங்கி, அதிபர் மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழைய வேண்டாம் எனவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நீதிமன்ற தடையுத்தரவை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாக செல்ல முற்பட்டதை தொடர்ந்து நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!