முழுமையாக மீண்டு வருவேன்: நடிகை சமந்தா நம்பிக்கை
நடிகை சமந்தா கடந்த ஆறுமாத காலமாக மையோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.

நடிகை சமந்தா கடந்த ஆறுமாத காலமாக மையோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதன் காரணமாக அவர் படங்களில் இருந்து பிரேக் எடுக்கப் போகிறார் என்ற தகவல் வந்தாலும், மீண்டும் உடற்பயிற்சி படங்கள் என பிஸியாக இருக்கிறார்.
அடுத்த மாதம் அவர் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் அதுதொடர்பாக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், தன்னுடைய மையோசிடிஸ் நோய் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதுதொடர்பாக சமந்தா கூறுகையில், " மையோசிடிஸ் நோய் இன்னும் எனக்கு முழுமையாக குணமடையவில்லை. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இருந்தாலும், முன்பு இருந்ததற்கு இப்போதும் பெரும் அளவில் தேறி இருக்கிறேன். விரைவில் இந்த நோயின் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வருவேன்" என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.