சம்பள உயர்வு: கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைப்பு
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் அழைக்கப்படவுள்ளனர்.
இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.