ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கம் தொடர்பில் சஜித் கடும் அதிருப்தி
ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் என்றபடியால் கட்சி பேதமின்றி நாம் அனைவரும் அவருக்காக முன் நிற்போம்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார் ரொஷான் ரணசிங்க
“நியாயமான காரணமின்றி ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடிய விளையாட்டுத்துறை அமைச்சரை, பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கியதன் பின்னணியில் மறைந்துள்ள கரம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் என்றபடியால் கட்சி பேதமின்றி நாம் அனைவரும் அவருக்காக முன் நிற்போம்." என அவர் கூறியுள்ளார்.