ஜனாதிபதி ரணிலுக்கு புகழாரம் சூட்டிய சாகல!

அஸ்வெசும திட்டம் தொடர்பில் இதுவரை 4 இலட்சத்து 91 ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும்,  6 ஆயிரத்து 773 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் கூறினார்

ஜுலை 4, 2023 - 12:46
ஜனாதிபதி ரணிலுக்கு புகழாரம் சூட்டிய சாகல!

துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியுமான சாகல ரத்னாயக்க புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதிக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம், ஹட்டன் நகரில் உள்ள தனியார் மண்டபமொன்றில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் கே கே பியதாச உள்ளிட்டவர்கள் சாகல ரத்னாயவுக்கு வரவேற்பளித்தனர்.

இங்கு உரையாற்றிய சாகல, அஸ்வெசும திட்டம் தொடர்பில் இதுவரை 4 இலட்சத்து 91 ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும்,  6 ஆயிரத்து 773 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் கூறினார்.

குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில் பரிசீலனை நடத்தப்பட்டு குறைந்த வருமானம் பெறும் பயனாளிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அஸ்வசும திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியை கிராமிய மட்டத்தில் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!