கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய மழை... ஒரு பந்துகூட வீசப்படவில்லை... தடைப்பட்டது முதலாவது டி20!

இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி ஆரம்பத்திலேயே மழையால் தாமதமானது.

டிசம்பர் 11, 2023 - 12:03
கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய மழை... ஒரு பந்துகூட வீசப்படவில்லை... தடைப்பட்டது முதலாவது டி20!
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றதுடன், தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு இந்தியா 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. 

இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இளம் இந்திய அணி வலுவான தென் ஆபிரிக்காவையும் அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.

இந்நிலைமையில் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி ஆரம்பத்திலேயே மழையால் தாமதமானது. 

அதனால் டாஸ் வீசுவதற்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் கொஞ்சம் வழி விட்டாலும் ஓவர்கள் குறைத்து போட்டியை நடத்துவதற்கு நடுவர்கள் தயாராக இருந்தனர். இருப்பினும் 2 மணி நேரமாக தொடர்ந்து வெளுத்து வாங்கிய மழை கொஞ்சம் கூட கருணை காட்டாமல் மைதானத்தை தண்ணீரால் நிரப்பியது.

இதனால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மழையால் டாஸ் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 

குறிப்பாக 3 வகையான தொடர்களைக் கொண்ட இந்த மிகப்பெரிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியே மழையால் செய்யப்பட்டதால் என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!