இதுவரை எந்த வீரருமே செய்யாத சாதனையை படைக்க போகும் ரோகித் சர்மா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

ஜனவரி 14, 2024 - 12:56
இதுவரை எந்த வீரருமே செய்யாத சாதனையை படைக்க போகும் ரோகித் சர்மா!

உலக டி20 கிரிக்கெட் அரங்கில் இதுவரை எந்த அணி வீரரும் செய்திடாத சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று நடைபெற உள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது t20 போட்டியில் படைக்க காத்திருக்கிறார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இந்தூரில் இன்று (ஜன 14) மாலை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

இந்தப் போட்டியில் பங்கேற்பதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார்.

36 வயதாகும் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் செப்டம்பர் 19, 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் . ரோகித் சர்மாவிற்கு நாளைய போட்டி 150ஆவது டி20 போட்டியாகும். 

உலகில் எந்த ஒரு வீரருமே இதுவரை 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியது இல்லை. எனவே ரோஹித் சர்மா இன்று புதிய மைல் கல்லை எட்ட இருக்கிறார் .

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!