மதத்தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த மதத்தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த மதத்தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அரசாங்கம் தன்னிச்சையாக மின் கட்டணத்தை அதிகரித்துள்ளமை தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மின்கட்டண அதிகரிப்பால் மக்கள் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.