குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரணம் மூன்று மடங்கு அதிகரிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக சமுர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணம் அஸ்வெசும ஊடாக வழங்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாகவே அஸ்வெசும சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டியிருந்த இருந்த 361 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்று மாதங்களுக்குள் புதிய ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்படும்.
இவ்வாறான நிதி ஒழுக்கத்தை பேணுவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜூன் மாதத்துக்கு பிறகு, தடைபட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.