மதுபானத்தின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மதுபானத்தின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானத்தின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 750 மில்லிலீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 ரூபாய் முதல் 1,000 ரூபாயினாலும் 175 மில்லிலீட்டர் மதுபான போத்தலின் விலை 200 ரூபாயினாலும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கலந்துரையாடல், அண்மையில் மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மதுபான உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்களின் விலை குறைந்துள்ளதால், மதுபானத்தின் விலையைக் குறைக்க வேண்டும் என மதுவரி திணைக்கள ஆணையர் தெரிவித்துள்ளார்.