மூன்று உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

சில அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சதொச குறைத்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டு, 195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 4 ரூபாயால் குறைக்கப்பட்டு, 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாயால் குறைக்கப்பட்டு, 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.