இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைப்பு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாயினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாயினாலும் குறைக்கப்பட உள்ளது.
இந்த விலை குறைப்பு மார்ச் 27 முதல் அமுலில் இருக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.