சற்றுமுன் அமைச்சரவையில் புதிய மாற்றம்!

(Colombo News21) அமைச்சரவையில் சற்றுமுன்னதாக புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக முன்னாள் சுகாதார அரமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சராக அவரது பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அமைச்சரவை மாற்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.