முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவு வெளியானது
ஜனாதிபதி தேர்தலின் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவு சற்றுமுன்னர் வெளியானது.

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தபால் வாக்கு முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
அதன்படி இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் அதிகூடிய தபால் மூல வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 6,641 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,675 தபால் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாமல் ராஜபக்ஷச 500 தபால் வாக்குகளையும், சர்வஜன பலய கூட்டணியின் திலித் ஜயவீர 251 தபால் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.