வெள்ளித்திரையில் களமிறங்கிய டிவி நடிகை அர்ச்சனா

இந்த சீரியலில் இவர் காமெடித்தனமான வில்லியாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார். இப்படியான நிலையில் திடீரென சீரியலில் இருந்து வெளியேறினார். 

ஜனவரி 5, 2023 - 20:27
வெள்ளித்திரையில் களமிறங்கிய டிவி நடிகை அர்ச்சனா

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அர்ச்சனா.

இந்த சீரியலில் இவர் காமெடித்தனமான வில்லியாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார். இப்படியான நிலையில் திடீரென சீரியலில் இருந்து வெளியேறினார். 

அதற்கு காரணமாக அப்போது பல்வேறு விஷயங்கள் கூறிய வந்த நிலையில் தற்போது அவரது வெளியேற்றத்திற்கு காரணம் வெள்ளித்திரை வாய்ப்பு தான் என தெரியவந்துள்ளது.

ஆமாம் வெள்ளித்திரையில் அருள்நிதி நடிக்கும் டிமான்டி காலனி பார்ட் 2 படத்தில் அருள்நிதிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை அர்ச்சனா.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!