உட்கார்ந்த இடத்தை விட்டு அசையல.. கோலியால் திக் திக்.. அஸ்வின் செய்த வேலை!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதன் முறையாக விளையாடி இருக்கிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதன் முறையாக விளையாடி இருக்கிறார்.
அப்போது இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தவுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பது குறித்து அஸ்வின் விவரித்து இருக்கிறார்.
போட்டிக்குப் பின்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அஸ்வின் அளித்த பேட்டியில் உலகக் கோப்பை தொடரில் தாம் பங்கு பெறுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
நான் வீட்டில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். சில உள்ளூர் அணிகளுக்காக விளையாடி இருந்தேன். அப்போதுதான் ரோகித் சர்மாவும் ராகுல் டிராவிட்டும் எனக்கு போன் செய்து ஏதேனும் சூழல் ஏற்பட்டால் உலகக் கோப்பை தொடரில் நீ விளையாட வாய்ப்பு இருக்கிறது. அதற்காக தயாராக இரு என்று கூறினார்கள்.
நான் நீங்கள் என்னை நோக்கி வர மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று காமெடியாக பதில் அளித்தேன். சென்னை ஆடுகளம் இன்று கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
நான் சென்னையில் பல கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்கிறேன். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா எவ்வாறு பந்து வீசப் போகிறது என்ற கலக்கத்தில் தான் நான் இருந்தேன்.
24 ஆண்டு கால வரலாறு.. ஆஸ்திரேலிய அணியின் வரலாற்று சாதனையை முடித்து காட்டிய இந்தியா!
நல்ல வேலையாக நாங்கள் டாசை இழந்தோம். என்னைப் பொறுத்த வரையில் பந்து வீச்சாளர்கள் 6 முதல் 8 பந்துகளை வீசிய பிறகு தான் ஒரு அளவுக்கு அந்த ஆடுகளத்தில் எப்படி செயல்பட முடியும் என்று யோசனை வரும். இந்திய அணி இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு விராட் கோலி ஒரு பந்தை தூக்கி அடித்தார்.
அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக டிரெஸ்ஸிங் ரூம் விட்டு ஓடி வந்தேன். பந்து மேலே சென்றவுடன் சரி முடிந்து விட்டது என்று நினைத்தேன். போட்டி முடிந்த பிறகு என்னை எழுப்பி விடுங்கள் என நினைத்தேன்.
கேட்சை கூட நான் பார்க்காமல் மீண்டும் ட்ரெஸ்ஸிங் ரூம் உள்ளே சென்றேன். ஆனால் பந்தை ஆஸ்திரேலிய வீரர் தவறவிட்ட உடன் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். அப்போது அதே இடத்தில் நான் உட்கார்ந்து விட்டேன்.
கொஞ்சம் கூட போட்டி முடியும் வரை நான் நகரவில்லை. இதனால் என்னுடைய கால்கள் எல்லாம் தற்போது வலிக்க ஆரம்பித்து விட்டது என அஸ்வின் கூறினார்.
இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படுவேன் என அஸ்வின் கூறினார்.