60 அடி உயரத்திலிருந்து விழுந்து கல்குவாரி தொழிலாளி உயிரிழப்பு
கல்குவாரி தொழிலாளி ஒருவர் பாறை மீதிருந்து சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கல்குவாரி தொழிலாளி ஒருவர் பாறை மீதிருந்து சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பாதுக்கை, ஹொராவல, மேற்கு துவா வீதியைச் சேர்ந்த 52 வயதான கே. அனில் சாந்த என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் மீகொட, டம்பே, ரணசிங்க மாவத்தையில் அமைந்துள்ள கல்குவாரியில் பணியாற்றி வந்தார்.
ஜனவரி 6 ஆம் திகதி, பாறை துளையிடும் பணி முடிந்த பிறகு, விழாமல் இருந்த பாறைகளை உருட்டுவதற்காக மலை உச்சியிலிருந்து கயிற்றைப் பயன்படுத்தி கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு பாறைத் துளை வெடித்துள்ளது. இதனால் அவர் சமநிலை தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
அவர் உடனடியாக ஹோமகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.