வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் அணி.. என்ன ஆச்சு தெரியுமா?

சஷான்க் சிங்-ஐ வாங்கியது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் அக்கவுண்ட்-இல் விளக்கம் அளித்துள்ளது.

டிசம்பர் 21, 2023 - 12:48
வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் அணி.. என்ன ஆச்சு தெரியுமா?

ஐ.பி.எல். 2024 மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இந்திய அணியில் இடம்பெறாத சஷான்க் சிங்-ஐ வெற்றகரமாக ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தில் எடுத்த பிறகு இருவரும் குழப்பமுற்ற நிலையில் காணப்பட்டனர்.

டிசம்பர் 19 நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணி சஷான்க் சிங்-ஐ வாங்கும் திட்டத்தில் இல்லாதது தெரியவந்துள்ளது. அணியில் வாங்க நினைக்காத வீரர் ஒருவரை பஞ்சாப் அணி வாங்கியதை புரிந்து கொண்ட ஏலதாரர் மல்லிகா சாகர் ஆச்சரியமுற்றார்.

சஷான்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள் இருந்த நிலையில், குழப்பத்தில் இருந்த பஞ்சாப் அணி 19 வயதான சஷான்க் சிங் என்ற வீரரை வாங்குவதற்கு பதிலாக 32 வயதான சஷான்க் சிங்-ஐ ஏலத்தில் எடுத்துள்ளது. 

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக துவங்கியது. இந்த நிலையில், சஷான்க் சிங்-ஐ வாங்கியது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் அக்கவுண்ட்-இல் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பான பதிவில், "சஷான்க் சிங்-ஐ வாங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. பட்டியலில் ஒரே பெயருடன் இரண்டு வீரர்கள் இருந்ததே குழப்பத்திற்கு காரணமாகி விட்டது. 

அவரை அணியில் எடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வெற்றிக்கு அவர் பங்களிப்பதை பார்க்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!