சம்பள உயர்வு கோரி நாடாளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம்
கலகத்தடுப்புப் பிரிவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளமையால் பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் தற்போது பதட்டமான நிலைமை காணப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கோரி, நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் ஆசிரியர் சங்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதனையடுத்து, நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கலகத்தடுப்புப் பிரிவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளமையால் பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் தற்போது பதட்டமான நிலைமை காணப்படுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான போதியளவு நிதி ஒடுக்கப்படாத காரணத்தால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.