நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்த யோசனைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவன், தனது உறவினர்களுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மலையகப் பகுதியில் இருந்து செந்தில் தொண்டைமான் என்ற ஒரு தமிழரை, புதிய கவர்னராக நியமித்து உள்ளனர். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பொகவந்தலாவை பகுதியில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.