ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வந்தடைந்துள்ளார்.

ஆகஸ்ட் 23, 2023 - 11:08
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட பத்து பேர் கொண்ட தூதுக்குழுவினர் நேற்று (22) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான SQ-468 என்ற விமானத்தில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையிலான கார்பன் நடுநிலைமை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் முன்னிலையில் பாரிஸ் மாநாட்டின் 6 வது சரத்திற்கு இணங்க கைச்சாத்திடப்பட்டதாக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!