ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் திறப்பு: தகவல் உண்மைக்கு புறம்பானது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று செவ்வாய்க்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 28, 2024 - 20:27
ஆகஸ்ட் 28, 2024 - 20:28
ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் திறப்பு: தகவல் உண்மைக்கு புறம்பானது

ஜெருசலேம் நகரத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை இலங்கை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று செவ்வாய்க்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!