கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில்: முன்னாள் அமைச்சர்
2024ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் நேற்று (19) அவர் இதனைக் கூறியுள்ளார்.
“ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை முன்நிறுத்துவது அனைத்து அரசியல் கட்சிகளினதும் தேவை. ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்திப் பயணத்தில் கொண்டு செல்கின்றன.
இது நாட்டுக்கு இலகுவான பயணமல்ல. இதுவொரு இருண்ட பயணம். தற்போது நாட்டில் ஒருவித முன்னோக்கு பார்வையுடன் கூடிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னோக்கிச் செல்வதையே நாம் எதிர்நோக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறோம்” என அவர் கூறியுள்ளார்.