ஜனாதிபதி - வியட்நாம் பிரதிப் பிரதமர் சந்தித்து பேச்சு - பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கவனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டின்போது நேற்று முன்தினம் (12) இந்த சந்திப்பு நடைபெற்றது.
55 வருடங்களாக வியட்நாம், இலங்கைக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் நம்பிக்கை மற்றும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை சாதகமாக மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் போதிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், விவசாயம், கல்வி, மதம், கலாசாரம், சுற்றுலா மற்றும் விமான சேவைகள் போன்ற துறைகளில் இலங்கையில் முதலீடு செய்ய வியட்நாம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.