பாதுகாப்பு தரப்பினருடன் புதிய ஜனாதிபதி சந்திப்பு
தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாதுகாப்பு தரப்பினரை இன்று (23) திங்கட்கிழமை முற்பகல் சந்தித்து பேசினார்.
முப்படைத் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.