தமிழ் எம்.பிக்களை சந்தித்து பேசினார் ஜனாதிபதி ரணில்
இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்றது.
இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளதுடன், காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்துக்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.