மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார  

ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.

ஜுலை 25, 2025 - 17:30
மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார  

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜூலை 28 முதல் 30, 2025 வரை மாலைதீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க மாலைதீவு ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும், பரஸ்பர ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்வார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இலங்கை மற்றும் மாலைதீவு, இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால், இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது.

ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!