முகத்தில் காயத்துடன் வனிதா விஜயகுமார்; ரசிகர்கள் அதிர்ச்சி

பிரதிப் ரசிகர் ஒருவர் தன்னை தாக்கியதாக முகத்தில் காயத்துடன் வனிதா விஜயகுமார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 26, 2023 - 18:52
நவம்பர் 26, 2023 - 23:54
முகத்தில் காயத்துடன் வனிதா விஜயகுமார்; ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. 

இவர் ஜோவிகா, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோரால் உரிமைகுரல் எழுப்பப்பட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால் பிரதீப் ரசிகர்கள் இவர்கள் மீது பயங்கர கோபத்தில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரதிப் ரசிகர் ஒருவர் தன்னை தாக்கியதாக முகத்தில் காயத்துடன் வனிதா விஜயகுமார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இது ஒரு கேம் ஷோ தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!