கொழும்பின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு
மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, அதனை சூழவுள்ள பகுதிகள், புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்திலும் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஏனைய பகுதிகளிலும் மின்சார விநியோகம் விரைவாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும் மின்சார சபை கூறி உள்ளது.