கடும் நெருக்கடியில் உருளைக்கிழங்கு விவசாயிகள்
உருளைக்கிழங்கு : உள்ளூர் உருளைக்கிழங்கின் கொள்முதல் விலை குறைந்ததால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உருளைக்கிழங்கு : உள்ளூர் உருளைக்கிழங்கின் கொள்முதல் விலை குறைந்ததால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சந்தையில் தொடர்ந்தும் விற்பனைக்கு வருவதால், உள்ளூர் உருளைக்கிழங்கை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் தயக்கம் காட்டுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை அடுத்த 4 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
9ஆம் திகதி முதல் இந்த இறக்குமதி வரி அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருக்கும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு அரசாங்கம் தற்போது 50 ரூபாய் வரி அறவிடுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.