உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்தியது அடிப்படை உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம், ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிபதி குழாமினால் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தியமை ஓர் அடிப்படை உரிமை மீறல் என உயர் நீதிமன்றம், இன்று வியாழக்கிழமை (22) தீர்ப்பளித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக, பெப்ரல் அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து முறைபாடு செய்த மனுவை விசாரித்த பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதி குழாமினால் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம், ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிபதி குழாமினால் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவேண்டுமெனவும் தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்றம் பணித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதியன்று இந்த தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், தேர்தலை நடத்துவதற்கு நிதிவசதி அளிக்கமுடியாது என அரசாங்கம் தெரிவித்திருந்தது.