பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா வைத்தியசாலையில் அனுமதி

வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 18, 2024 - 12:52
ஆகஸ்ட் 18, 2024 - 12:55
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா வைத்தியசாலையில் அனுமதி

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பி.சுசீலா பாடியுள்ளார். திருப்பதியில் கடந்த மார்ச் மாதம் அவருக்கு கௌவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாடகி பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!