ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பொலிஸார் இருவர் கைது!

01 கிலோ 53 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த பொலிஸ் பரிசோதகர் (35 வயது) மற்றும் கான்ஸ்டபிள் (32 வயது) ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலையில் அமைந்துள்ள சொகுசு வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சொகுசு வாகனத்தில் போதைப்பொருள் கடத்தும் நோக்கில் வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) முகாமின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றத்திற்காக பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.