துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டான் பிரியசாத் உயிரிழப்பு
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டிய லக்ஸந்த செவன அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் நேற்று (22) இரவு 9.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டான் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது தோளில் இரண்டு துப்பாக்கி குண்டுகளும், மார்பில் இரண்டு துப்பாக்கி குண்டுகளும் பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் மற்றுமொருவர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.