பிரபல நடிகை காலமானார் 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

டிசம்பர் 9, 2023 - 11:23
பிரபல நடிகை காலமானார் 

தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (வயது 85). 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லீலாவதி நீலமங்களத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை லீலாவதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!