மொத்தமாக ஏமாற்றம்.. நாங்களும் தேடி கேட்ச் கொடுத்தோம்.. தோல்வி பற்றி ஹர்திக்!

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. 

ஜுலை 30, 2023 - 13:10
மொத்தமாக ஏமாற்றம்.. நாங்களும் தேடி கேட்ச் கொடுத்தோம்.. தோல்வி பற்றி ஹர்திக்!

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. 

உலகக்கோப்பைத் தொடருக்கு கூட தகுதிபெறாத ஒரு அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தோல்விக்கு இந்திய வீரர்களின் மோசமான பேட்டிங்கே காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்த தோல்விக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், எங்களின் திறமைக்கு ஏற்ப பேட்டிங் செய்யவில்லை. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பேட்டிங் செய்த போது ஆடுகளம் நன்றாக மாறிவிட்டது.

அடுத்த ஆட்டத்த பாருங்க.. இந்திய அணியை எப்படி வீழ்த்துறோம்னு.. கேப்டன் ஹோப்!

இந்த தோல்வி சோகமாக அமைந்தாலும், ஏராளமாக கற்றுக் கொள்ள முடிந்தது. இந்திய அணியின் தொடக்கம் சரியாக இருந்தது. இஷான் கிஷனும் சிறப்பாக ஆடினார். இந்திய கிரிக்கெட்டுக்கு அது முக்கியமானதாக பார்க்கிறேன்.

சுப்மன் கில்லை தவிர்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் ஃபீல்டரை தேடி கேட்ச் கொடுக்கிறோம். பந்துவீச்சின் போது ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து வீரர்களுக்கு உத்வேகம் அளித்தார். 

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் பிரஷரான சூழலில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி, அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். 

உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராவதற்காக நான் அதிக ஓவர்களை வீச வேண்டிய தேவையுள்ளது. ஆனால் நான் முயலை போல் வேகமாக தயாராகாமல், ஆமையை போல் மிதமான வேகத்தில் உலகக்கோப்பைக்கு தயாராகிறேன் என்று நினைக்கிறேன்.

திணறிய இந்திய வீரர்கள்.. திடீரென வாட்டர் பாயாக மைதானத்திற்குள் வந்த கிங் கோலி!

உலகக்கோப்பைத் தொடரில் அனைத்தும் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஒருநாள் தொடரில் 1-1 என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், 3வது ஒருநாள் போட்டி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணியின் பேட்டிங் மோசமான இருப்பது கண்கூடாக தெரியும் நிலையில், இந்திய நிர்வாகத்தின் அடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!