வெசாக் பார்க்க கொழுப்பு சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்!
இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்த 10 பேர், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு வெசாக் கொண்டாட்டங்களை கண்டு களிப்பதற்காக ஆனமடுவில் இருந்து வந்த குழுவினரின் டிப்பரில் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்த 10 பேர், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துவிட்டு, கொழும்பில் இருந்து மீண்டும் ஆனமடுவிற்கு இக்குழு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாரவில - முதுகடுவ பகுதியில் வைத்து டிப்பர் வீதியை விட்டு விலகி, மரத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.