தவளைகளுக்கு திருமணம் செய்த மக்கள்... காரணம் தெரியுமா?
இந்த பகுதியில் ஓரளவு மழை பெய்திருந்தாலும், விவசாயத்தை தொடர்ந்து நடத்துவதற்கும், அதிகரித்து வரும் வெப்பத்திலிருந்து பயிர்களை காப்பாற்றவும் மழையை வேண்டினர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சனா சிர்சிலா மாவட்டத்தில் வேமுலவாடா ஊராட்சி பகுதியை சேர்ந்த திப்பாப்பூர் கிராம மக்கள் இரு தவளைகளுக்கு இடையே திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இந்த பகுதியில் ஓரளவு மழை பெய்திருந்தாலும், விவசாயத்தை தொடர்ந்து நடத்துவதற்கும், அதிகரித்து வரும் வெப்பத்திலிருந்து பயிர்களை காப்பாற்றவும் மழையை வேண்டினர். மழை வராவிட்டால் 22 நாட்களுக்குள் பயிர்கள் சேதம் அடைவது உறுதி என்பதை அறிந்த அந்த மக்கள் தங்கள் பக்கத்தில் இருந்து ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதற்கு முன்பு மழை பெய்ய தாமதமாகும் பொழுது, அங்குள்ள விவசாயிகள் காப்பாத்தளி என்ற பாரம்பரிய சடங்கை செய்து, மழை கடவுளான வருணாவை வணங்குவது வழக்கம்.
பெண் முதலையை திருமணம் செய்த மேயர்... காரணம் தெரியுமா?
இவர்களது பிரார்த்தனைகள் பதிலளிக்கப்பட்டால் அந்த கிராமத்தில் நல்ல மழை பெய்யும். இதனை அங்குள்ள விவசாயிகள் கொண்டாடுவார்கள். அந்த பருவத்தில் ஆரோக்கியமான பயிர்களை அறுவடையும் செய்வார்கள். எனினும், மழை பெய்யத் தவறினால் தலைமுறை தலைமுறையாக செய்யப்பட்டு வந்த காப்பாத்தளி சடங்கை மீண்டும் செய்வார்கள்.
சடங்கின் ஒரு பகுதியாக தவளையை சாணியில் முக்கி, கிராமத்திற்கு வெளியே இருக்கக்கூடிய குளத்தில் விடுவார்கள். இவ்வாறு செய்வது வருணன் கடவுளை மகிழ்ச்சி அடைய செய்து, அதன் மூலமாக தங்களுக்கு கடவுள் மழை பொழிய செய்வார் என்பது இவர்களது நம்பிக்கையாக உள்ளது.
கடந்த மாதம் இதே போன்ற ஒரு சடங்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாத் மாவட்டத்தை சேர்ந்த கல்காத்கி தாலுக்காவில் அமைந்துள்ள சூராஷெட்டிகொப்பா கிராமத்தில் நடந்தேறியது.
இது போன்ற தனித்துவமான பாரம்பரியங்கள், கலாச்சார சடங்குகள் மீது இந்திய மக்களின் வேரூன்றி நிற்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற சடங்குகள் உண்மையா இல்லையா என்பதை கடந்து இவை தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.