பாராளுமன்ற உணவுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உணவினை பெற்றுக்கொள்ள 2,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

இன்று (5) முதல், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உணவினை பெற்றுக்கொள்ள 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 450 ரூபாயாக காணப்பட்ட உணவு விலை, ஆளும் கட்சியின் முன்மொழிவின் அடிப்படையில் அண்மையில் அதிகரிக்கப்பட்டது.
அதன்படி, பாராளுமன்ற உணவகத்தில் காலை உணவு 600 ரூபாய், மதிய உணவு 1200 ரூபாய் மற்றும் மாலை தேநீர் 200 ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகரிப்பு பெப்ரவரி 1 ஆம் திகதி அமலுக்கு வந்த நிலையில், அதன்பின்னர் முதல் முறையாக பாராளுமன்றம் இன்று கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.