கர்ப்பமாக இல்லை... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

இதனையடுத்து நடிகை பரினீதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஏப்ரல் 2, 2024 - 19:58
ஏப்ரல் 2, 2024 - 20:09
கர்ப்பமாக இல்லை... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவரின் உறவுமுறை தங்கையான பரினீதி சோப்ராவும் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவை காதலித்து வந்தார். இதனையடுத்து இவர்களது திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில் நடைபெற்றது. 

பின்னர் பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சத்தாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது நடித்துள்ள 'சம்கிலா' படத்தின் புரமோஷனுக்காக நடிகை பரினீதி சோப்ரா சற்று தளர்வான உடை அணிந்து வந்திருந்தார். 

இதைப் பார்த்து பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான் அவர் இப்படி உடை அணிந்து வந்தார் என வதந்திகளை பரப்பினர். 

இதனையடுத்து நடிகை பரினீதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வெள்ளை நிறத்திலான பிட்டான ஜீன்ஸ், ஓவர் கோட் உடையுடன் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "நான் பிட்டான உடைகளையே இனி அணிகிறேன். ஏனெனில், முன்பு கப்தான் உடை அணிந்தபோது நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனப் பலரும் கூறினர். அது உண்மை இல்லை" எனச் சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!