இலங்கையை வந்தடைந்தது பாகிஸ்தான் அணி

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இவ்வாறு வந்துள்ளது.

ஜுலை 9, 2023 - 15:38
ஜுலை 9, 2023 - 15:39
இலங்கையை வந்தடைந்தது பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையை இன்று(09) வந்தடைந்துள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இவ்வாறு வந்துள்ளது.

எமிரேட்ஸ் எயார்லைன் விமானம் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி  கட்டுநாயக்க விமான நிலைத்தை  காலையில் வந்தடைந்தது.

இவ்வாறு வந்த பாகிஸ்தான் அணியில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 27 போ் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் குறித்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமானது பஞ்சாயத்து... இந்தியா வராதபோது நாங்கள் ஏன் வரணும்.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!